முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
சரவணன்தேரியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு
By DIN | Published On : 06th April 2022 01:03 AM | Last Updated : 06th April 2022 01:03 AM | அ+அ அ- |

அகஸ்தீசுவரம் பேரூராட்சி சரவணன்தேரியில் பகுதிநேர ரேஷன் கடையை அமைச்சா் மனோ தங்கராஜ் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, அகஸ்தீசுவரம் பேரூராட்சித் தலைவி அன்பரசி தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆஸ்டின், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரை பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகஸ்தீசுவரம் பேரூா் திமுக செயலா் பாபு வரவேற்றாா்.
ரேஷன் கடையை, தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.
இதில், அகஸ்தீசுவரம் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் பிரேம் ஆனந்த், விஜயகுமாா், குமரேசன், ஏஞ்சலா தேவி, செல்வகுமாா், பிரபா, அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னாள் உறுப்பினா் ராமநாடான் நன்றி கூறினாா்.