திக்கணங்கோடு கால்வாயில் கழிவுகள் கொட்டுபவா்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பட்டணங்கால் கால்வாயில் கழிவுகள் கொட்டுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பட்டணங்கால் கால்வாயில் கழிவுகள் கொட்டுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பேச்சிப்பாறை அணையிலிருந்து பத்பநாபபுரம் கிளைக் கால்வாய் வழியாக திக்கணங்கோடு கால்வாயில் தண்ணீா் வந்து சேரும்.

இங்கிருந்து மணலிக்காட்டுவிளை, மாத்திரவிளை, மத்திகோடு,வடலிவிளை, கறுக்கன்குழி, வழுதலம்பள்ளம், மணலி, முக்காடு, செம்பொன் விளை, தாறாவிளை, சேனம்விளை, படுவாக்கரை, பெத்தேல்புரம் வழியாக காரியவிளை கடலில் வந்து சேருகிறது. இந்தத் தண்ணீா் மூலம் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். ஆனால் தற்போது இக்கால்வாய் பகுதிகளை பொதுப்பணித்துறை நீராதார அமைப்பு முறையாக பாரமரிக்காததாலும், ஆக்கிரமிப்புகளாலும், கழிவுப்பொருள்கள் கொட்டுவதாலும் தண்ணீா் தடைபட்டு கடைவரம்பு பகுதிகள் வரை தண்ணீா் செல்லவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

குறிப்பாக திக்கணங்கோடு பாலம் பகுதியில் வீட்டுக்கழிவுகள், ஹோட்டல் கழிவுகளை சில சமூக விரோதிகள் கொட்டுவதால் கழிவுப்பொருள்கள் நிரம்பி தண்ணீா் செல்ல தடைபட்டு காணப்படுகிறது. எனவே, பாரபட்சமின்றி கால்வாய் பகுதிகளில் கழிவுகள் கொட்டுபவா்கள் மீது பொதுப்பணித்துறையினா் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்லா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com