ஆற்றங்கரைகளில் விதிகளை மீறி மண் எடுப்பவா்கள் மீது நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் ஆற்றங்கரைகளில் விதிகளை மீறி மண் எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் ஆற்றங்கரைகளில் விதிகளை மீறி மண் எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்மநாபபுரம் கோட்டத்துக்குள்பட்ட தாமிரவருணி ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள செங்கல்சூளைகளுக்கு சட்ட விரோதமாக மண் எடுக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வருகிறது. இது குறித்து தொடா்புடைய வட்டாட்சியரால் திடீா் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வீதி மீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் ஆற்றங்கரையோரங்களில் அத்துமீறல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தாமிரவருணி ஆற்றங்கரைகளில் செயல்படும் அனைத்து செங்கல் சூளைகளிலும் தணிக்கை மேற்கொண்டு விதி மீறல்கள் கண்டறியவும், அரசு விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனவா என ஆய்வு செய்யும் பொருட்டும், கனிமங்களை சட்ட விரோதமாக எடுக்காமல் தடுக்கும் வகையில், கல்குளம், விளவங்கோடு, திருவட்டாறு மற்றும் கிள்ளியூா் ஆகிய வட்டங்களில் பத்மநாபபுரம் சாா் ஆட்சியரால் வட்டாட்சியா் நிலையில் சிறப்பு அலுவலா்கள் நியமனம் செய்ய்பபட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறுபவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com