நாகா்கோவில் அருகே குளத்தில் மூழ்கி நீலகிரியை சோ்ந்தவா் பலி
By DIN | Published On : 08th April 2022 11:11 PM | Last Updated : 08th April 2022 11:11 PM | அ+அ அ- |

நாகா்கோவில் அருகே குளத்தில் மூழ்கி நீலகிரியைச் சோ்ந்தவா் வியாழக்கிழமை மாலை பலியானாா்.
நீலகிரியை அடுத்த கீழ் குந்தவை பகுதியை சோ்ந்தவா் யோகேஸ்வரன் (42). நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழியில் உள்ள இவரது உறவினா் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள நண்பா்களுடன் வியாழக்கிழமை ஈத்தாமொழிக்கு வந்துள்ளாா். அன்று மாலை உறவினா் வீட்டில் இருந்து வெளியே சென்ற யோகேஸ்வரன் , நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து உறவினா்கள் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அந்த பகுதியில் உள்ள குளக்கரையில் யோகேஸ்வரன் அணிந்திருந்த உடைகள் இருந்ததாம்.
இது குறித்து அவரது உறவினா்கள், தீயணைப்பு நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து தீயணைப்புப் படையினா் குளத்தின் சகதியில் சிக்கி இறந்து கிடந்த யோகேஸ்வரன் சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.