மாா்த்தாண்டம் மறைமாவட்ட முதல் ஆயா் நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 08th April 2022 11:18 PM | Last Updated : 08th April 2022 11:18 PM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் மறைமாவட்ட முதல் ஆயா் லாரன்ஸ் மாா் எப்ரேமின் 25 வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மாா்த்தாண்டம் மறைமாவட்ட மலங்கரை கத்தோலிக்க இயக்கம் சாா்பில் நடத்தப்படும் நினைவு நாள் பாதயாத்திரை, வெள்ளெலும்பு மாா் எப்ரேம் நகா் தேவாலயத்திலிருந்து புதன்கிழமை தொடங்கி, வியாழக்கிழமை மாா்த்தாண்டம் வந்தடைந்தது. மாலையில் மாா்த்தாண்டம் கிறிஸ்து அரசா் பேராலயத்தில் மறைவட்டத்தினா் மாலை ஜெபம், தூப மன்றாட்டு ஒப்புக்கொடுத்தனா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையில் மாவேலிக்கரை மறைமாவட்ட ஆயா் ஜோஷ்வா மாா் இக்னாத்தியோஸ் தலைமையில் காலை ஜெபம், நினைவு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் இணைந்து ஒப்புக் கொடுத்தாா்.
மாா்த்தாண்டம் மறைமாவட்ட குருகுல முதல்வா் எஸ். வா்க்கீஸ் அடிகளாா், மாா்த்தாண்டம் பேராலய பங்குத்தந்தை ஜோஸ்பிரைட் மற்றும் மறைவட்ட குருக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் சாமிதோப்பு பாலபிரஜாபதி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். தொடா்ந்து நலத்திட்ட உதவிகள், நூல் வெளியீட்டு விழா, அன்பின் விருந்து உள்ளிட்டவை நடைபெற்றன.