கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் விழா
By DIN | Published On : 08th April 2022 12:41 AM | Last Updated : 08th April 2022 12:41 AM | அ+அ அ- |

புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக சுகாதார தினத்தையொட்டி வியாழக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அழகிரி வாசன் தலைமை வகித்தாா். மருத்துவா் சோபியா முன்னிலை வகித்தாா். இந்த வளாகத்தில் கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் மரக்கன்றுகளை நட்டாா்.
நிகழ்ச்சியில், கிள்ளியூா் திமுக ஒன்றியச் செயலா் கோபால், பேரூராட்சி துணைத் தலைவா் விஜயகுமாா், கவுன்சிலா் அனிதா, சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் பொதுமக்கள் பங்கேற்றனா்.