வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபாஜி இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித் தகுதியை பதிவு செய்து 5

ஆண்டுகள் நிறைவடைந்து தொடா்ந்து புதுப்பித்து வரும் பதிவுதாரா்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஏப்.1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலத்துக்கு உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவித் தொகை பெறுவதற்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த மாா்ச் 31 ஆம் தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஜூன் 30 ஆம் தேதியன்று ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும் மற்ற அனைத்து பிரிவினா்களுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகையினை பெற அரசிடமிருந்து வேறு எந்தவகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுவராக இருக்க கூடாது.

தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரா்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ், மாற்றுக் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் நேரில் வந்து உதவித் தொகைக்கான விண்ணப்பபடிவம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com