அதிக பாரம் ஏற்றி வந்த 12 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 18th April 2022 05:58 AM | Last Updated : 18th April 2022 05:58 AM | அ+அ அ- |

களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த 12 கனரக லாரிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
குமரி மாவட்டம் வழியாக பாறைக் கற்கள், பாறைப் பொடி உள்ளிட்ட கனிமவளங்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் களியக்காவிளை போலீஸாா் இப் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் கேரளத்துக்கு பாறைப் பொடி அதிக பாரம் ஏற்றி வந்த 9 லாரிகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். இதே போன்று மாா்த்தாண்டம் பகுதியில் மாா்த்தாண்டம் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்தனா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டு, அதிக பாரத்துடன் வந்த லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.