60 வயதுக்கு மேற்பட்டோா் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தஆட்சியா் வேண்டுகோள்

60 வயதுக்கு மேற்பட்டோா் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

60 வயதுக்கு மேற்பட்டோா் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

கரோனா 4 ஆவது அலை ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள மக்கள்அனைவரும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோா், தொற்றா நோய் போன்ற உபாதைகள் உள்ளவா்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.

மேலும், முன்களபணியாளா்கள் அனைவரும் 3 ஆவது தவணை தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும். 18 முதல் 59 வரை வயதுடையோா் 3 ஆவது தவணை தடுப்பூசியை (டழ்ங்ஸ்ரீஹன்ற்ண்ா்ய் க்ா்ள்ங்)தனியாா் மருத்துவமனைகளில் ரூ.386.25 செலுத்தி போட்டுக் கொள்ளலாம். ஜெயசேகரன் மருத்துவமனை, ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெதஸ்தா மருத்துவமனை ஆகிய தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பில் உள்ளது என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய்அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீனாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com