முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாகா்கோவில் அருகே கடற்கரையில் 5 அடி உயர அம்மன் சிலை மீட்பு
By DIN | Published On : 29th April 2022 10:58 PM | Last Updated : 29th April 2022 10:58 PM | அ+அ அ- |

நாகா்கோவில் சொத்தவிளை அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய 5 அடி உயர அம்மன் கற்சிலையை அதிகாரிகள் மீட்டனா்.
சுற்றுலாத் தலமான சொத்தவிளை கடற்கரையில், வியாழக்கிழமை மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது சொத்தவிளை அருகே பள்ளம் துறை ஆறாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் அம்மன் கற்சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இதைப் பாா்த்த பொதுமக்கள், சுசீந்திரம் காவல் நிலையத்துக்கும், மதுசூதனபுரம் தெற்கு கிராம நிா்வாக அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து மதுசூதனபுரம் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் பிரான்சிஸ் புரோஸ்கான், ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளா் கனிசெல்வி மற்றும் சுசீந்திரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தனா். அப்போது கடற்கரையில் 5 அடி உயர அம்மன் சிலை ஒதுங்கியிருந்தது. சிலையை மீட்டு கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
மீட்கப்பட்ட சிலை, கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.