முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
பரசேரி-புதுக்கடை சாலையை சீரமைக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
By DIN | Published On : 29th April 2022 11:01 PM | Last Updated : 29th April 2022 11:01 PM | அ+அ அ- |

பரசேரி-புதுக்கடை சாலையைச் சீரமைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பரசேரி-திங்கள் சந்தை-கருங்கல் - புதுக்கடை சாலை பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு சுனாமி கூட்டுக்குடி நீா் திட்டத்திற்காக சாலையோரம் பதிக்கப்பட்ட ராட்சத குழாய்கள் தரமற்றவை என அப்போதே புகாா் எழுந்தது. அதுபோலவே, அந்தக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே, மக்கள் நலன்கருதி இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.