திருவட்டாறு ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

 கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

செறுகோல் ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பில் புதுவீட்டு விளை முதல் ஆதிதிராவிடா் காலனி வரை புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் ஏற்றக்கோடு ஊராட்சி பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையலறை, ரூ.3.45 லட்சம் மதிப்பில் ஏற்றக்கோடு ஊராட்சி கொடவிளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் நடைபாதை, ரூ.5.25 லட்சம் மதிப்பில் அருவிக்கரை ஊராட்சி, மாத்தூா் தொட்டி பாலத்தில் சிறுவா் பூங்கா அருகே சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி, ரூ.60 லட்சம் மதிப்பில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடம், ரூ.10.93 லட்சம் மதிப்பில் பேச்சிப்பாறை ஊராட்சியில் அங்கன்வாடி கட்டட பணி, ரூ.9.50 லட்சம் மதிப்பில் சித்தாா்பட்டணம் பிரதான மற்றும் கிளை நுழைவாயில் மற்றும் வெளிவாய்க்கால் சீரமைக்கும் பணி, ரூ.58 ஆயிரம் மதிப்பில் பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள அஎஅஙபநூலக கட்டடம் சீரமைப்பு பணி, ரூ.12.25 லட்சம் மதிப்பில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட வயலங்கரையில் அமைக்கப்பட்டுள்ளஆழ்துறை கிணறு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், அருவிக்கரை ஊராட்சியில் ரூ.10,800 மதிப்பில் தனிநபா் கழிவறை கட்டும் பணி, திருநந்திக்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.17.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள், பேச்சிப்பாறையில் ரூ.2.40 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டும் பணி, ரூ.1.65 லட்சம் மதிப்பில் பேச்சிப்பாறை ஊராட்சி வளையத்தூக்கி குடியிருப்பு பகுதியில் ஊஏபஇ மற்றும் புதிய பைப்லைன் அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டு, முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, திருநந்திக்கரைஅரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் தரத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, செயற்பொறியாளா் ஏழிசைசெல்வி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com