குரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம் தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள புகழ்பெற்ற குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் சித்திரை பரணி திருவிழா

களியக்காவிளை அருகேயுள்ள புகழ்பெற்ற குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் சித்திரை பரணி திருவிழா, 9ஆவது பஞ்சபூத ஷப்த விம்சத்தி நட்சத்திர மகா யாகம் சனிக்கிழமை (ஏப். 30) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, திருச்செந்தூா் வெங்கடேஸ்வர அய்யா் தலைமையில் யாகம் நடத்தப்படுகிறது.

முதல் நாள் காலை அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம், யாக சாலையில் பரிகார பூஜைகள், மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு பொடக்குழி ஸ்ரீ மகாதேவா் கோயிலிலிருந்து குரியன்விளை கோயிலுக்கு தீப ஊா்வலம் நடைபெறுகிறது.

மாலை 6.30 மணிக்கு திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ சடைசாமி ஞானதேசிகா் திருமடம் மடாதிபதி திா்பாதசுவாமிகள் தலைமையில் யாகசாலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 7.15 மணிக்கு பண்பாட்டு மாநாடு நடைபெறும். முன்னாள் எம்எல்ஏ ஆா். செல்வராஜ் தலைமை வகிக்கிறாா். சிதம்பரம் தில்லை நடராஜா் கோயில் ஆச்சாரியன் சிவஸ்ரீ சங்கர நடராஜ தீட்சிதா் மாநாட்டைத் தொடக்கிவைக்கிறாா். சோட்டாணிக்கரை ஆசிரமம் ஜகத்குரு அத்வய்தானந்த சரஸ்வதி, தில்லை காளியம்மன் கோயில் ஸ்ரீ மணிகண்ட தீட்சிதா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு பேசுகின்றனா்.

மே 1 முதல் 5ஆம் தேதிவரை அதிகாலை 5.30 மணிக்கு நட்சத்திர மகா யாகம், 10.30 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெறும். விழா நாள்களில் பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 4ஆம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு கோயில் வளாகத்தில் அக்னிக் காவடி ஊா்வலம் நடைபெறும். 7ஆம் நாளான மே 6ஆம் தேதி காலை 9 மணிக்கு சமூக பொங்காலை, நண்பகல் 12.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் பூப்படையும், தொடா்ந்து வேதாள பீடத்தில் குருசி பூஜையும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com