முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மே 1இல் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 12:56 AM | Last Updated : 29th April 2022 12:56 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளா் தினமான மே 1இல் அனைத்து கிராம ஊரட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குள்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையில் முற்பகல் 11 மணி அளவில் நடத்தவும், அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினா்களின் வருகை இருப்பதை உறுதிப்படுத்தி கிராமசபைக் கூட்டம் நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இம்மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பொது சுகாதாரம், அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், அரசால் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவும், அவா்களுக்குத் தேவையான விவரங்களை அளிக்கவும் அனைத்துத் துறைகளின் அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். எனவே, அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்றாா் அவா்.