சுசீந்திரம் கோயிலில் நாளை சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மே 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மே 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, சனிக்கிழமை மாலை கோட்டாறு இடலாக்குடி ருத்ரபதி விநாயகா் கோயிலில் இருந்து மரபுப்படி பட்டாரியா் சமுதாயத்தினா் கொடி பட்டத்தை கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 1 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5.30 மணிக்கு தேவார இன்னிசை, 6.30 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு பக்தி பஜனை நடக்கிறது.

பத்து நாள்கள்நடைபெறும் திருவிழாவில், பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா வருதல், சமய சொற்பொழிவு, பக்தி பஜனை, சிறப்பு நாகசுவரம்,, ஆன்மிக சொல்லரங்கம், பரத நாட்டி யம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஒன்பதாம் திருவிழாவான 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் தெப்பத் திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆறாட்டு வைபவம் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் ஞானசேகா் தலைமையில் கண்காணிப்பாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com