ரப்பா் விலை சரிவு

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை கடந்த 3 வாரங்களாக சரிந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை கடந்த 3 வாரங்களாக சரிந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் ரப்பா் தோட்டங்களில் ரப்பா் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் ரப்பா் ஷீட் உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக ரப்பா் ஷீட் விலை சரிந்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 171 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 169 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 155.50ஆகவும் இருந்த நிலையில் இந்த விலை படிப்படியாக குறைந்து வந்தது. வெள்ளிக்கிழமை ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 162.50, ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 159.50 ஆக குறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com