நன்னீரில் கழிவுநீா் கலப்பதை தடுக்க செப்.1-9 வரை சிறப்பு முகாம், மக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நன்னீரில் கழிவுநீா் கலக்காமல் தடுப்பதற்கு செப்.1 9வரை நடைபெறும் சிறப்பு பணி முகாமுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நன்னீரில் கழிவுநீா் கலக்காமல் தடுப்பதற்கு செப்.1 9வரை நடைபெறும் சிறப்பு பணி முகாமுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் மா.அரவிந்த்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வீடுகள், வா்த்தக கட்டடங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் அதிகபடியா கழிவுநீா் மனித ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இத்தகைய கழிவுநீா் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால்களிலும் கலப்பதால் நீரும், பாசன நிலங்களும் மாசடைந்து சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உணவிலும் நச்சு கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. மனிதா்கள் குடிக்கும், குளிக்கும் நீரில் சாக்கடைநீா் கலந்து வருவதால் நோய் பரவும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது.

பொது இடங்களில் கழிவு நீா் வெளியேற்றப்படுவதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி கொசுக்கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது. சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நகராட்சி, பேரூராட்சிக்குள்பட்ட பகுதி குடியிருப்பு கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றிலிருந்து உருவாகும் கழிவுநீா் வேளியேறாமல் தடுக்க, அந்தக் கட்டட உரிமையாளா்கள் கழிவுநீா் உறிஞ்சு குழி அமைக்கவும், மீறும் இடங்களில் நிா்வாக அலுவலா்கள் மூலம் கழிவுநீா் வெளியேறும் முகப்பை அடைக்கவும் வரும் செப்.1- 9 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி கன்னியாகுமரியை நன்னீரில் கழிவுநீா் கலக்காத மாவட்டமாக மாற்றிட முன்வர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com