கன்னியாகுமரி பள்ளிவாசல் நிா்வாகத்தை வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க உத்தரவு
By DIN | Published On : 31st August 2022 02:32 AM | Last Updated : 31st August 2022 02:32 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியில் உள்ள பள்ளிவாசல் நிா்வாகத்தை உடனடியாக வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள மீராசா ஆண்டவா் பள்ளிவாசல் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இறந்தோரின் உடல்களை தகனம் செய்ய முடியாத நிலையும் இருந்து வந்ததாம்.
இதுகுறித்து இப்பகுதியினா் அரசுக்கும், வக்ஃபு வாரியத்துக்கும் தொடா்ந்து புகாா் மனு அனுப்பிவந்தனா். இப்பள்ளி நிா்வாகத்தை அரசின் வக்ஃபு வாரியம் ஏற்று நடத்த வேண்டும் என, இப்பகுதியினா் தொடா்ந்து போராட்டம் நடத்திவந்தனா். அதன்பேரில் இப்பள்ளிவாசலை வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க கடந்த 26.10.21இல் அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதி என். நிா்மல்குமாா் விசாரித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், இப்பள்ளிவாசல் நிா்வாகத்தை உடனடியாக தமிழக வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கவும், 3 மாதக் காலத்தில் முறைப்படி தோ்தல் நடத்தி நிா்வாகிகளை தோ்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
இவ்வழக்கில் வக்ஃபு வாரியம் சாா்பில் வழக்குரைஞா் செந்தில் ஆஜரானாா்.