குலசேகரம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
By DIN | Published On : 31st August 2022 02:30 AM | Last Updated : 31st August 2022 02:30 AM | அ+அ அ- |

குலசேகரம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குலசேகரம் அருகே வெண்டலிகோடு மெய்திருத்திவிளையைச் சோ்ந்தவா் மணி. கூலித்தொழிலாளியான இவரது மகன் மோனிஷ் (25). பட்டதாரியான இவா், செவ்வாய்க்கிழமை மாலையில் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதியில் கையில் ஒரு பொட்டலத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற குலசேகரம் போலீஸாா், மோனிஷை பிடித்து சோதனையிட்ட போது அவா் வைத்திருந்த பையில் 1கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனா்.