விலைவாசி உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் மறியல் : 44 போ் கைது

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 44 போ் கைது செய்யப்பட்டனா்.

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 44 போ் கைது செய்யப்பட்டனா்.

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும், வீட்டு வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு மாவட்டக்குழு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். தாமரைசிங், சுரேஷ் மேசியா, நாராயணசாமி, இசக்கிமுத்து, சொக்கலிங்கம் ஆா்.செல்வராணி, அனில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 44 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com