பழுதடைந்த சாலையைசீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 18th December 2022 02:56 AM | Last Updated : 18th December 2022 02:56 AM | அ+அ அ- |

தேங்காய்ப்பட்டினம் தோப்பு பகுதியில் பழுதடைந்த சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேங்காய்ப்பட்டினத்திலிருந்து தோப்பு வழியாக முள்ளூா் துறை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து நேரிடுமோ என அச்சத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. இச் சாலையைப் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே இச்சாலையைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.