முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மாா்த்தாண்டம் அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 07th February 2022 12:41 AM | Last Updated : 07th February 2022 12:41 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே கேரளத்துக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் புரந்தரதாஸ் தலைமையில் அதிகாரிகள் மாா்த்தாண்டம் அருகே இரவிபுதூா்கடையில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச்சென்று சுவாமியாா்மடம் பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா்.
700 கிலோ ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச்செல்லப்படுவது தெரியவந்தது. ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். காா், ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அரிசியை, காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.