குலசேகரம் ஆலயத்தில் அன்னை எமின் நினைவு தினம்

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலயத்தில் அன்னை எமினின் 50ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலயத்தில் அன்னை எமினின் 50ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

குலசேகரம் ஐசிஎம் அருள்சகோதரிகள் இல்லத்தில் தொடக்கக் கால கன்னியராக இருந்தவா் எமின். பெல்ஜியம் நாட்டைச் சோ்ந்த இவா், குலசேகரம் பகுதியில் மறைபரப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை செய்துவந்தாா். இதனால் மக்கள் அவரை ‘அன்னை எமின்’ என அழைத்தனா்.

இவரது மறைவுக்குப் பின்னா், ஆண்டுதோறும் இவரது நினைவைப் போற்றும் வகையில் குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலயத்தில் கஞ்சி வழங்குவது வழக்கம்.

அதன்படி, ஆலயப் பங்குப் பேரவையினா், கத்தோலிக்க சேவா சங்கம் இணைந்து நடத்திய கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை பங்குத்தந்தை ஜோன் கிளிட்டஸ் தொடக்கிவைத்தாா். உதவிப் பணியாளா் ஜெறி, பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜான்சன், செயலா் டெல்லா ரோஸ், பொருளாளா் மகேஷ், கத்தோலிக்க சேவா சங்கத் தலைவா் ஜெயசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com