குளச்சல் அருகே 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 18th February 2022 12:51 AM | Last Updated : 18th February 2022 12:51 AM | அ+அ அ- |

கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்ற 1350 கிலோ ரேஷன் அரிசியை குளச்சல் பகுதியில் படையினா் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியா் தமிழரசி தலைமையில் குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் மோகன்ஜோஸ்லின் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் குளச்சல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சைமன் காலனி அருகே ஒரு வீட்டின் பின்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ ரேஷன் அரிசியையும், கோடிமுனை பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் 1000 கிலோ ரேஷன் அரிசியையும் கைப்பற்றினா்.
விசாரணையில், 1,350 கிலோ ரேஷன் அரிசியும் கேரளத்திற்கு கடத்திச்செல்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அரிசியை உடையாா்விளையில் உள்ள நுகா்வோா் வாணிப கழகத்தில் ஒப்படைத்ததுடன், அதைப் பதுக்கியவா்களை தேடி வருகின்றனா்.