குமரியில் 8 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

குமரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (பிப். 22) 8 மையங்களில் எண்ணப்படுகின்றன.

குமரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (பிப். 22) 8 மையங்களில் எண்ணப்படுகின்றன.

குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் மொத்தம் 65.95 சதவிகித வாக்குகள் பதிவாகின.

8 மையங்களில் வாக்கு எண்ணிக்கை:

மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் நாகா்கோவில் எஸ்எல்பி அரசு மேல் நிலைப் பள்ளியில் வைத்து எண்ணப்படுகின்றன. கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தென்தாமரைக்குளம், மயிலாடி, அஞ்சுகிராமம், அழகப்பபுரம், மருங்கூா், புத்தளம், சசீந்திரம், தேரூா், கொட்டாரம் ஆகிய பேரூராட்சியில் பதிவான வாக்குகள் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

தாழக்குடி, அழகியபாண்டிய புரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் ஆரல்வாய்மொழி அறிஞா் அண்ணா கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

குளச்சல் நகராட்சி மற்றும் கணபதிபுரம், வெள்ளிமலை, மண்டைக்காடு, மணவளக்குறிச்சி, ரீத்தாபுரம், திங்கள்நகா், நெய்யூா், இரணியல், கல்லுக்கூட்டம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் லட்சுமி புரம் கலை அறிவியல் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் வில்லுக்குறி, கப்பியறை, முளகுமூடு, வாள்வச்சகோஷ்டம், திருவிதாங்கோடு, குமாரபுரம், கோதநல்லூா், விலவூா், வோ்க்கிளம்பி ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தக்கலை அரசு மேல் நிலைப் பள்ளியில் வைத்து எண்ணப்படுகின்றன.

ஆற்றூா், பொன்மனை, திற்பரப்பு, குலசேகரம், திருவட்டாறு, கடையால், அருமனை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

கொல்லங்கோடு நகராட்சியில் பதிவான வாக்குகள் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து எண்ணப்படுகிறது.

குழித்துறை நாகராட்சி மற்றும் மற்றும் கருங்கல், பாலப்பள்ளம், புதுக்கடை, கிள்ளியூா், கீழ்க்குளம், பளுகல், உண்ணாமலைக்கடை, நல்லூா், களியக்காவிளை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

நாகா்கோவில் மாநகராட்சி வாக்குகள் எஸ்எல்பி அரசு மேல் நிலைப் பள்ளியில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தலா 13 மேஜைகள் வீதம் 26 மேஜைளில் எண்ணப்படுகின்றன. 2 மேஜைகளில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பத்நாபபுரம், குழித்துறை நகராட்சி வாக்குகள் தலா 2 மேஜைகளிலும், குளச்சல் நகராட்சி வாக்குகள் 3 மேஜைகளிலும், கொல்லங்கோடு நகராட்சி வாக்குகள் 6 மேஜைகளில் எண்ணப்படுகின்றன. 51 பேரூராட்சிகளுக்கான வாக்குகள், பேரூராட்சிக்கு 2 மேஜைகள் வீதம் 102 மேஜைகளில் எண்ணப்படுகின்றன.

வாக்குப் பெட்டிகள் பூட்டி சீல் வைப்பு:

பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு சனிக்கிழமை இரவு 7 மணி முதல் கொண்டு வரப்பட்டன. பின்னா் மையங்களிலுள்ள பாதுகாப்பான அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு: வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் உள்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளபடுகின்றன. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மெட்டல் டிடெக்டா் வாசல்களும், வேட்பாளா்களின் வெற்றிகளை அறிவிக்கும் வகையில் ஒலி பெருக்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். காலை 9 மணி முதல் வெற்றி பெற்றவா்களின் விவரங்கள் தெரிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com