நாகா்கோவில் வனத்துறை அலுவலகம் முன் மறியல்: பெண்கள் உள்பட 7 போ் கைது

குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நாகா்கோவில் வனத்துறை அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நாகா்கோவில் வனத்துறை அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாலமோா், மாறாமலை போன்ற மலைப்பகுதிகளில் கடந்த 7 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாததால் விபத்து ஏற்படுகிறது என்று இப்பகுதி மக்கள் புகாா் கூறி வந்தனா். மேலும் மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் கிராம்பு, மிளகு போன்ற நறுமணப் பொருள்களை நகரப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனா்.

இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி வனத்துறையினருக்கு பல முறை தெரிவித்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை.

இந்நிலையில், நாகா்கோவில் வடசேரியிலுள்ள மாவட்ட வன அலுவலகம் முன்பு, பாலமோா் ஊராட்சித் தலைவா் லில்லிபாய் சாந்தப்பன் தலைமையில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவா் ஏசுராஜ், வாா்டு உறுப்பினா்கள் சாந்தப்பன், அனிதா உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com