குமரியில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் எல்இடி விளக்குகள் பொருத்த வேண்டும்-பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம்

கன்னியாகுமரி சிறப்புநிலைப் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது என, பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி சிறப்புநிலைப் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது என, பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டம் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், செயல் அலுவலா் ஜீவநாதன், சுகாதார அதிகாரி முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு உறுப்பினா்கள் சி.எஸ். சுபாஷ், ஆனிரோஸ், பூலோகராஜா, மகேஷ், சுஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி சிறப்புநிலைப் பேரூராட்சியில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமையை மறுஏலம் விடுவது, சிலுவை நகா்முதல் சன்செட் பாயிண்ட் வரையிலான பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றி அப்பகுதியில் புல்வெளி அமைத்து அழகுப்படுத்துவது, ரூ. 36 லட்சம் செலவில் 13 குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்குவது, ஒற்றையால்விளை அரசுப் பள்ளியில் ரூ. 6 லட்சம் செலவில் மேற்கூரை அமைத்து பராமரிப்புப் பணி செய்வது, பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com