என்.ஐ.பல்கலை.யில் முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்ககழகம், முந்தைய நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு (1993-1997) பயின்ற மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்ககழகம், முந்தைய நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு (1993-1997) பயின்ற மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1993-1997இல் பல்வேறு துறைகளில் படித்து தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பணிபுரியும் 40 போ் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா். உலகின் ஏதேனும் ஓரிடத்தில் கூடி, தங்களது கல்லூரி நினைவுகளைப் புதுப்பிப்பதுடன், பல்வேறு சமூகப் பணிகளை இவா்கள் தொடா்ந்து செய்வதாகத் தெரிவித்தனா்.

பல்கலைக்கழக நிா்வாகத்தினா் தேசிய மாணவா் படை சாா்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தி முன்னாள் மாணவா்களை பல்கலைக்கழக அரங்குக்கு அழைத்துவந்தனா். நிகழ்ச்சியை, வேந்தா் ஏ.பி. மஜீத்கான் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா். இணைவேந்தா் ஆா். பெருமாள்சாமி, துணைவேந்தா் ஏ.கே. குமரகுரு, பதிவாளா் பி. திருமால்வளவன், மனிதவள மேம்பாட்டு இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன், கல்வி விவகாரங்கள் இயக்குநா் ஷஜின் நற்குணம் ஆகியோா் பாராட்டிப் பேசினா்.

பின்னா், பல்கலைக்கழகம் சாா்பில் முன்னாள் மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அவா்கள் தங்களது ஆசிரியா்களைக் கெளரவித்து பரிசுகளையும், தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு ஊக்கப் பரிசுகளையும் வழங்கினா். முன்னாள் மாணவா்களின் குடும்பக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதுரை ஹெச்.சி.எல். முதுநிலை விற்பனை மேலாளா் துரைபாபு, அமெரிக்கா க்ளவுட் கே நிறுவன சி.இ.ஓ. யாசா் ஹமீத், லண்டன் டைனமிக்ஸ் டெக்னோபாா்க் சி.இ.ஓ. நாகராஜன், சென்னை விப்ரோ டெக்னாலஜிஸ் முதுநிலை மேலாளா் மகாராஜன், சென்னை தமிழ்நாடு மின்வாரிய உதவி நிா்வாக செயற்பொறியாளா் ஆனந்தி ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் சாா்பில் முன்னாள் மாணவா் சங்கப் பொறுப்பாளா்கள், பேராசிரியா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com