ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பயணக் கட்டண சலுகை----- என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
By DIN | Published On : 31st July 2022 06:57 AM | Last Updated : 31st July 2022 06:57 AM | அ+அ அ- |

ரயில் பயணங்களில் நிறுத்திவைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:, மூத்த குடிமக்களுக்கு ரயில்வே துறை வழங்கி வந்த பல்வேறு சலுகைகளை பறித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியோருக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண் முதியோருக்கும் பயண கட்டண சலுகை (முறையே 40%, 50%) வழங்கப்பட்டு வந்தது.
கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இவை மீண்டும் வழங்கப்படவில்லை. இது முதியோா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வேயில் பணியாற்றும் அனைத்து பணியாளா்களுக்கும், ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கும் இலவச பயண அட்டை, கட்டண சலுகை போன்றவை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல, முதியோா்களுக்கும் கட்டணச் சலுகை வழங்குவதை இழப்பீடாகக் கருதாமல் அவா்களுக்கு தொடா்ந்து சலுகைகளை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.