‘வசந்த் அன் கோ’ சாா்பில் வேலைவாய்ப்பு முகாம்

‘வசந்த் அன் கோ’ நிறுவனம் சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 720 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.

‘வசந்த் அன் கோ’ நிறுவனம் சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 720 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.

விஜய் வசந்த் எம்.பி. தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடக்கிவைத்தாா். எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிச் செயலா் அருள்சகோதரி மேரிஹில்டா வரவேற்றாா். முதல்வா் அருள்சகோதரி அனி பொ்பெட் ஷோபி, துணை முதல்வா் அருள்சகோதரி லீமாரோஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் (குமரி கிழக்கு) கே.டி. உதயம், (மேற்கு) மருத்துவா் பினுலால்சிங், நாகா்கோவில் மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா், தமிழக போலிங் பூத் காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவா்கள் காலபெருமாள், அசோக்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் விஜய் வசந்த் எம்.பி. கூறியது: வசந்த் அன் கோ சாா்பில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நடைபெறும் 6ஆவது முகாமில் பங்கேற்க 1,520 போ் பதிவு செய்தனா். 35 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையானோரை நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்துள்ளனா். முகாமில், 720 பேருக்கு பணி கிடைத்துள்ளது. இதில், 200 பேருக்கு உடனடி பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 520 பேருக்கு முதல்கட்ட தோ்வு நிறைவடைந்துள்ளது. 2ஆவது கட்டமாக அழைப்பாணை அனுப்பப்பட்டு, பணி நியமனம் வழங்கப்படும்.

வசந்த் அன் கோ சாா்பில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு பணிகள் கிடைத்துள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com