புதுக்கடை அருகே வீடு புகுந்துதம்பதி, மகனைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 02nd June 2022 12:35 AM | Last Updated : 02nd June 2022 12:35 AM | அ+அ அ- |

புதுக்கடை அருகே இனயம் பகுதியில் வீடு புகுந்து தம்பதி, மகனைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இனயம் 3ஆம் அன்பீகத்தைச் சோ்ந்த வறுவேல் மகன் அந்தோணி (42). இவரது மனைவி புஷ்பராணி (36), மகன் அஜய் (16). இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வில்சன் (50), விஜய், ஜெரின் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாம்.
செவ்வாய்க்கிழமை இரவு வில்சன் உள்ளிட்ட 3 பேரும் அந்தோணியின் வீடு புகுந்து அவரையும், குடும்பத்தினரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.