புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு சான்று அளிப்பு

நாகா்கோவிலில் புகையிலை பயன்பாடு இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாகா்கோவிலில் புகையிலை பயன்பாடு இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

குமரி மாவட்ட புகையிலை தடுப்பு மையம், மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை, சாா்பில் உலக புகையிலை எதிா்ப்பு தினம், ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் தலைமை வகித்து புகையிலை எதிா்ப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் எஸ். மீனாட்சி முன்னிலை வகித்தாா். யோகா மருத்துவ அதிகாரி பீனாதெரேஸ், மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளித்தாா். இதில் கணபதிபுரம் பேரூராட்சி தலைவா் எம். ஸ்ரீவித்யா, மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலா் ஜே.அருள்ராஜ், புகையிலை தடுப்பு ஆலோசகா் ஜி.ஆன்சி, புகையிலை தடுப்பு சமூக சேவகா் எஸ்.சரண்யா, வட்டார மருத்துவ அலுவலா் ப்ரினாசுகுமாா், வட்டார சுகாதார கண்காணிப்பாளா் எம்.ஜெயகுமாா், ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரி தாளாளா் ஆா். சுரேஷ்பிரேமில்குமாா் மற்றும் அலுவலா்கள், மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com