கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறப்பு

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் புதன்கிழமை திறந்து வைத்தாா்

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ சாகுபடியான கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணை திறப்பது வழக்கம். நிகழாண்டு , அணையைத் திறப்பது தொடா்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு பேச்சிப்பாறை அணையை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் திறந்து வைத்தாா்.

சிறப்பு பூஜைகள்: இதையொட்டி, பேச்சிப்பாறை அணை அருகேயுள்ள பேச்சியம்மன் கோயில், அணையின் மதகுப் பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து பாசனக் கால்வாயில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் மற்றும் விவசாயிகள் நெல் மணிகளையும், பூக்களையும் தூவினா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசின் உத்தரவு படி கோதையாறு மற்றும் பட்டணம் கால் பாசன அமைப்பில் பயன்பெறும் 79 ஆயிரம் ஏக்கா் நிலங்களின் பாசனத்திற்கு கன்னிப்பூ சாகுபடிக்கு

பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 850 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீா் தேவைக்கேற்ப பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளில் வரும் நாள்களில் திறக்கப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சலை பெற வேண்டும். மாவட்டத்தில் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. குறிப்பிட்ட சில இடங்களில் விடுபட்டுள்ள பணிகள் இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் அ. விஜயகுமாா், பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு செயற் பொறியாளா் வசந்தி, உதவிச் செயற்பொறியாளா் மெல்கி சதேக், உதவிப் பொறியாளா் லூயிஸ் அருள் செழியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) வாணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஜான் ஜெகத் பிரைட், மாவட்ட பாசனத்தாா் சபை தலைவா் வின்ஸ் ஆன்றோ, முன்னோடி விவசாயிகள் புலவா் செல்லப்பா, செண்பகசேகர பிள்ளை, பெரியநாடாா், பத்மதாஸ், ஹென்றி, விஜி மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com