குமரி பகவதியம்மன் கோயிலில் இன்றுவைகாசி திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி,கோட்டாறு இளங்கடை பட்டாரியா் சமுதாய ருத்ரபதி விநாயகா் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சாா்பில், கொடிப்பட்டம் பாரம்பரிய முறைப்படி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு எடுத்துவரப்பட்டு, கோயிலில் சமா்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, கன்னியாகுமரியைச் சோ்ந்த கிறிஸ்தவ மீனவரான கயிலியாா் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கொடிமரக் கயிறை மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்துவந்து கோயிலில் இரவு 7 மணிக்கு ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com