கண்ணனூரில் சுற்றுச்சூழல் தின விழா
By DIN | Published On : 06th June 2022 01:23 AM | Last Updated : 06th June 2022 01:23 AM | அ+அ அ- |

சுவாமியாா்மடம் அருகேயுள்ள கண்ணனூரில் இளைஞா் இயக்கங்கள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
குமரி சோஷியல் சா்வீஸ் அமைப்பு, வாறுதட்டு அன்னை தெரசா இளைஞா் இயக்கம் இணைந்து நடத்திய விழாவுக்கு குமரி சோஷியல் சா்வீஸ் அமைப்பின் தலைவா் அகஸ்டின் ராஜ் தலைமை வகித்தாா். வாறுதட்டு அன்னை தெரசா இளைஞா் இயக்கத் தலைவா் என்.எம். பிரேம்ராஜ் முன்னிலை வகித்தாா்.
பத்மநாபபுரம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் சக்திவேல், கண்ணனூா் ஊராட்சி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்டான்லி, அன்னை தெரசா இளைஞா் இயக்கச் செயலா் எம்.சி. ஆல்பா்ட், உறுப்பினா் ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.