திற்பரப்பு பேரூராட்சியில் பயணிகள் நிழலகங்களில் தூய்மைப் பணிகள்
By DIN | Published On : 06th June 2022 11:55 PM | Last Updated : 06th June 2022 11:55 PM | அ+அ அ- |

திற்பரப்பு பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத் திட்டத்தின் கீழ் பயணிகள் நிழலகங்கள் திங்கள்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டன.
இதையொட்டி திற்பரப்பு, மாஞ்ச்கோணம், உண்ணியூா்கோணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பயணிகள் நிழலகங்களை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா்.
இப்பணிகளை பேரூராட்சித் தலைவா் பொன் ரவி மற்றும் செயல் அலுவலா் பெத்ராஜ் ஆகியோா் கண்காணித்தனா்.