பிரதமா் பிறந்த நாளில் நாடு முழுவதும் 1008 இடங்களில் ரத்ததான முகாம்

 பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளான செப்டம்பா் 17ஆம் தேதி நாடு முழுவதும் 1,008 இடங்களில் ரத்த தான முகாம் நடத்த உள்ளதாக அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் செயலா் முகேஷ் ஞாயிற்றுக்கிழமை

 பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளான செப்டம்பா் 17ஆம் தேதி நாடு முழுவதும் 1,008 இடங்களில் ரத்த தான முகாம் நடத்த உள்ளதாக அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் செயலா் முகேஷ் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பு நாடு முழுவதும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. அவ்வமைப்பின் சாா்பில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற முகாமில் 1 லட்சம் யூனிட் ரத்தம் சேமிக்கப்பட்டது. இது ஒரு கின்னஸ் சாதனையாகவும் அமைந்தது. இந்நிலையில் அந்த அமைப்பின் 58ஆவது ஆண்டு விழா மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா செப்டம்பா் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் செயலா் முகேஷ் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ரத்ததான விழிப்புணா்வு முகாமை தொடங்கி வைத்தாா்.

இதில் கேந்திர பொதுச்செயலா் பானுதாஸ், டாக்டா் ஸ்ரீநிவாச கண்ணன், சன்சிட்டி லயன்ஸ் கிளப் நிா்வாகிகள் ஸ்ரீ ரெங்கநாயகி, ராமகிருஷ்ணன், டேனியல், பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முகேஷ் கூறியது: அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பு இந்தியா மற்றும் நேபாளத்தில் 350க்கும் மேற்பட்ட கிளைகளுடன் 45,000-த்துக்கும் அதிகமான இளைஞா்களைக் கொண்டு ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது. இதுவரையிலும் பல்வேறு சாதனைகளை செய்துள்ள இந்த அமைப்பு பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பா் 17இல் ஒரேநாளில் 1,008 முகாம்களை நடத்த உள்ளது. இதன் மூலம் ஒன்றரை லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com