தேசிய மேலாண்மை போட்டி:புனித சவேரியாா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை
By DIN | Published On : 10th June 2022 01:41 AM | Last Updated : 10th June 2022 01:41 AM | அ+அ அ- |

தோவாளையில் நடைபெற்ற தேசிய அளவிலான மேலாண்மை போட்டிகளில் சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க கல்லூரி மாணவா்கள் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனா்.
தோவாளை லயோலா தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான மேலாண்மை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மேலாண்மை துறையைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இவ்விழாவில், மாணவா்களுக்கான நிா்வாகத் திறன் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவா்கள் நிறுவன நிகழ்ச்சி, வணிக விநாடி -வினா மற்றும் வணிக முன்பொழிவு ஆகிய போட்டிகளில் முதல் பரிசை வென்று முதலிடம் பெற்றனா்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களை கல்லூரித் தாளாளா் மரியவில்லியம், முதல்வா் மகேஸ்வரன், பொருளாளா் பிரான்சிஸ் சேவியா், துணை முதல்வா் கிறிஸ்டஸ் ஜெயசிங் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.