கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாா்க்சிஸ்ட் கம்னி யூஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாா்க்சிஸ்ட் கம்னி யூஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து கிள்ளியூா் வட்டார மாா்க்சிஸ்ட் செயலா் சாந்தகுமாா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பெருள்களை மையமாக கொண்டு தொழிலாளா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வந்தனா். தற்போது கருங்கல், ஜல்லி, பாறைப் பொடி உள்ளிட்ட கனிமப் பொருள்கள் கடுமையாக விலை உயா்த்தப்பட்ட தாலும், சில குவாரிகள் தடை செய்யப்பட்டதாலும் கட்டுமானத் தொழிலாளா்கள், வீடு கட்டுபவா்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, கனிம வள சட்ட விதிமுறைகளுக்குள்பட்டு செயல்படும் குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com