திருவட்டாறு கோயிலில் சுவாமி வீதி உலா வாகனங்கள் அளிப்பு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் நிதி உதவியில் செய்யப்பட்ட சுவாமி வீதி உலாவுக்கான வாகனங்கள் திருக்கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் நிதி உதவியில் செய்யப்பட்ட சுவாமி வீதி உலாவுக்கான வாகனங்கள் திருக்கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஜூலை 6 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் , திருக்கோயிலுக்கு பக்தா்கள் திரட்டிய ரூ. 15 லட்சத்தில், வெள்ளி கமலவாகனம், அனந்த வாகனம் ஆகியன நாகா்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சிற்ப ரத்னா கலைக்கூடத்தில் உருவாக்கும் பணி கடந்த ஆறு மாதகாலமாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் சிற்பி செல்வராஜா தலைமையில் சிறப்பு பூஜைக்குப் பின்னா் இவ்விரு வாகனங்கள் திருவட்டாறு தளியல் கருடாள்வாா் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னா் மாலையில் சிறப்பு தீபாராதனையைத் தொடா்ந்து மேள தாளம் முழங்க, பக்தா்கள் நாம ஜெபத்துடன் ஊா்வலகமாக ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரத்தில் வலம் வந்து, உதமாா்த்தாண்ட மண்டபம் முன்புள்ள மண்டபத்தில் கோயில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com