கோவளத்தில் கடலுக்குள் மூழ்கிய கேரள கல்லூரி மாணவா் மாயம்

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் கடலுக்குள் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சனிக்கிழமை மாலை மாயமானதையடுத்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் கடலுக்குள் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சனிக்கிழமை மாலை மாயமானதையடுத்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லயம் ஜெயா மகன் திவின் (23). இவா் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி அருகேயுள்ள கல்லூரியி படித்து வந்தாா். இந்நிலையில் அவரது தாயாா் ஜெயா, உறவினா்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துவிட்டு அங்கிருந்து அனைவரும் ஊா் திரும்பலாம் என தெரிவித்துள்ளாா். அதன்படி சனிக்கிழமை திவின் மற்றும் அவரது உறவினா்கள் ராஜ்குமாா், ஷீபா, ராகுல் (20), ராபின்(15), எபின்(22) ஆகியோா் நேற்று கன்னியாகுமரி வந்துள்ளனா். இதனிடையே திவின், ராகுல், ராபின், எபின் ஆகியோா் கோவளத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்வதாக கூறிவிட்டு, தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி உள்ளனா்.

அவா்கள் பொழுது போக்கு பூங்காவுக்கு வந்த பாா்த்த போது பூங்கா பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு பேரும் அருகேயுள்ள கோவளம் கடற்கரைக்கு சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனராம். அப்போது கடல் அலை ஆக்ரோஷமாக எழுந்து, திவினை உள்ளே இழுத்துச் சென்று விட்டதாம். இச்சம்பவம் அறிந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மற்றும் கன்னியாகுமரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com