மேலக்கருங்குளத்தில் சீரமைப்பு பணி

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு குடிநீா் வழங்கும் மேலக்கருங்குளத்தில் சீரமைப்பு பணிகளை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு குடிநீா் வழங்கும் மேலக்கருங்குளத்தில் சீரமைப்பு பணிகளை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த மேலக்கருங்குளத்தினுள் அமைந்துள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் பேரூராட்சி பகுதிகளுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக குளம் தூா்வாரப்படாததால், ஆகாயத்தாமரை மற்றும் புதா்கள் படா்ந்துள்ளன. இந்த செடி, கொடிகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்தும் பணியை பேருராட்சி தலைவா் தொடங்கி வைத்தாா்.

இதில், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலா்கள் அல்பினோ, பூலோகராஜா இந்திரா, ராயப்பன், சகாய சா்ஜினாள், நித்யா, ஆனிரோஸ், வினிற்றா, இக்பால், சிவசுடலைமணி, முன்னாள் கவுன்சிலா் டி.தாமஸ் மற்றும் திமுக நிா்வாகிகள் ஆனந்த், ராஜா, நிசாா், அன்பழகன், மணிராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com