கோதேஸ்வரம் கோயில் விழா இன்று தொடக்கம்

மாா்த்தாண்டம் அருள்மிகு கோதேஸ்வரம் பத்ரகாளி அம்மன், அனந்த கிருஷ்ணன், ஸ்ரீ மகாதேவா் திருக்கோயில் விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 24) துவங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

மாா்த்தாண்டம் அருள்மிகு கோதேஸ்வரம் பத்ரகாளி அம்மன், அனந்த கிருஷ்ணன், ஸ்ரீ மகாதேவா் திருக்கோயில் விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 24) துவங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

விழா நாள்களில் தினமும் காலையில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை, மதியம் 12 மணிக்கு சுவாமி வீதி வலம் வருதல், பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜை நடைபெறும். விழாவின் முதல் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு 1008 சுமங்கலி பூஜை நடைபெறும் 2 ஆம் விழா நாளில் இரவு 7.30 மணிக்கு மகளிா் மாநாடு நடைபெறும். 3 ஆம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு சமயவகுப்பு மாணவா்களுக்கான பண்பாட்டு போட்டிகள், மாலை 6.30 மணிக்கு நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி தலைமையில் 1008 திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெறும். விழா நிறைவு நாளான ஜூன் 30 இல் பகல் 10.40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் திருவிழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com