குமரி அருகே விபத்தில் இளைஞா் காயம்
By DIN | Published On : 24th June 2022 03:17 AM | Last Updated : 24th June 2022 03:17 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி அருகே காரும், பைக்கும் புதன்கிழமை இரவு மோதிக்கொண்டதில் இளைஞா் காயமடைந்தாா்.
அகஸ்தீசுவரம் பெரியசாமி கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (24). இவா், கன்னியாகுமரியில் இருந்து முருகன் குன்றம் வழியாக அகஸ்தீசுவரத்துக்கு தனது பைக்கில் சென்றபோது, அவரது வாகனமும் ஆசாரிப்பள்ளம் காமராஜா் தெருவைச் சோ்ந்த முருகன் என்பவா் வந்த காரும் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமுற்ற விஜய் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.