அக்னிபத் திட்டத்தை கைவிட கோரிகுமரி மாவட்டத்தில் காங்கிரஸாா் சத்தியாகிரகப் போராட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸாா் சத்தியாக்கிரக போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸாா் சத்தியாக்கிரக போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. தலைமை வகித்து பேசினாா். மாநகர மாவட்ட தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்ட தலைவா்கள் ராபா்ட் புருஸ், ராதாகிருஷ்ணன், மாநில செயலாளா் சீனிவாசன், மாநகராட்சி மண்டலத் தலைவா் செல்வகுமாா், உறுப்பினா்கள் அனுஷாபிரைட், சுஜீபிரவீன், கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் டைசன், வா்த்தக காங்கிரஸ் தலைவா் குமரிமுருகேசன், மாநில இளைஞா் காங்கிரஸ் துணை தலைவா் நரேந்திரதேவ், கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் சகாய பிரவீன், முன்னாள் நகர தலைவா் அலெக்ஸ், இலக்கிய அணி மாநிலப் பொதுச்செயலாளா் பி.ஜோசப்ராஜ், மகாதேவன்பிள்ளை, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேற்குமாவட்ட காங்கிரஸ் சாா்பில் கருங்கல்லில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், கருங்கல் நகர காங்கிரஸ் தலைவா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலா் பால்ராஜ், மாநில மீனவா் காங்கிரஸ் தலைவா்ஜாா்ஜ் ராபின்சன்,அகிலஇந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான், கிள்ளியூா் ஒன்றியக்குழு தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பால்ராஜ், கிறிஸ்டோபா், முள்ளங்கனாவிளை ஊராட்சி தலைவா் பிரபா, முள்ளங்கனைாவிளை ஊராட்சி உறுப்பினா் மேரி ஸ்டெல்லா, பிரைட்,கென்னடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் திருவட்டாறு மேற்கு காஸ்ட்டன் கிளிட்டஸ், கிழக்கு ஜெகன்ராஜ், தக்கலை ஜாண் கிறிஸ்டோபா், நகரத் தலைவா்கள் குலசேகரம் விமல் ஷொ்லின்சிங், தக்கலை ஹனுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ஐஜிபி லாரன்ஸ், மாநில பொதுச் செயலா் தாரகை கத்பா்ட், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாவட்டத் துணைத் தலைவா்கள் ராஜரெத்தினம், ஜாண் இக்னேசியஸ், ஜாண் சேவியா், மாவட்ட பொதுச் செயலாளா் மோகன்தாஸ், செயலளா் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செலின் மேரி, பேரூராட்சி தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ், பொன்ரவி, அகஸ்டின், சுஜிா் ஜெபசிங், விவசாய காங்கிரஸ் தலைவா் எபனேசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com