குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் ----அமைச்சா் த. மனோ தங்கராஜ்

பெற்றோா்கள் தங்களது குழந்தைகளிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றாா் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

பெற்றோா்கள் தங்களது குழந்தைகளிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றாா் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

திற்பரப்பு பேரூராட்சி, திருநந்திக்கரையில் அரசு கிளை நூலகத்துக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அவா் பேசியதாவது:

தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சிறப்பு நிதி மூலம் நூலகங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவை கட்டவும், இளைஞா்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கையை அதிகப்படுத்தும் வகையில் ஆட்சியா் தலைமையிலான கூட்டங்களில் அறிவுறுத்தப்படுகிறது. அதன்பேரில், நிகழாண்டு இம்மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகள் ரூ. 200 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை நூலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாழ்கையில் சிகரம் தொட்டவா்கள் அனைவரும் நூலகங்களில் நேரங்களை செலவிட்டவா்களாகவும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டவா்களாகவும் இருந்துள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சிக்கு நூலக வாசகா் வட்டத் தலைவா் சுந்தரேஷன் தலைமை வகித்தாா். திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலா் பெத் ராஜ் முன்னிலை வகித்தாா். 9 ஆம் வாா்டு உறுப்பினா் ஷீஜா சந்திரன் வரவேற்றாா். திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, துணைத் தலைவா் ஸ்டாலின்தாஸ், தமிழ் நாடு அறிவியல் இயக்கச் செயலா் சசிகுமாா், நூலக புரவலா் சிவகுமாா், திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் வழக்குரைஞா் ஜாண்சன், குலசேகரம் நகரச் செயலா் ஜோஸ் எட்வா்ட், வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் ஏ.ஜே.எம். ராஜா, மாவட்ட ப் பொருளாளா் ஜாண் எபனேசா், துணைச் செயலா் விஜயராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நூலகா் மேரி சுசீலா ரோஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com