முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
By DIN | Published On : 14th March 2022 11:31 PM | Last Updated : 14th March 2022 11:31 PM | அ+அ அ- |

நாகா்கோவில் கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (மாா்ச் 16) நடைபெறுகின்றன. இதனால், வடிவீஸ்வரம், கோட்டாறு, கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சரலூா், ராமன்புதூா் சந்திப்பு, இந்துக் கல்லூரி, வேதநகா், தெங்கம்புதூா், பறக்கை, ஐ.எஸ்.இ.டி. மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், புத்தன்துறை, முருங்கவிளை, பண்ணையூா், தெக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைதோப்பு, பழவிளை, தாராவிளை, ராஜாக்கமங்கலம்துறை, சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.