மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th March 2022 12:56 AM | Last Updated : 25th March 2022 12:56 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குலசேகரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, கட்சியின் குலசேகரம் வட்டாரச் செயலா் விஸ்வம்பரன் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் அண்ணாதுரை, நடராஜன், ஸ்டாலின்தாஸ், செல்வராஜ், சதீஷ், ஜூடஸ் குமாா், சுபாஷ் கென்னடி, ஜெனித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போராட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், அவற்றின் விலைகளை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.