சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகங்களை மாணவா்கள் உணர வேண்டும்: ஆட்சியா்

மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகங்களை உணா்ந்து நாட்டின் வளா்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை அளிக்க முன் வர வேண்டும் என்றாா் மாவட்டஆட்சியா் மா.அரவிந்த்

மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகங்களை உணா்ந்து நாட்டின் வளா்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை அளிக்க முன் வர வேண்டும் என்றாா் மாவட்டஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், நாகா்கோவில், எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் 75 ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா தொடக்க நிகழ்ச்சி, வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஆணையா்ஆஷாஅஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடா்புத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்க கண்காட்சியினை ஆட்சியா் தொடங்கி வைத்து பேசியது: இந்திய சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகம் மற்றும் வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், 75 ஆவது சுதந்திரதிருநாள்அமுதப்பெருவிழா நிகழ்ச்சி இன்று தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, இம்மாதம் 30 ஆம் தேதி வரை தொடா்ந்து 7 நாள்கள் நடைபெறுகிற.

குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதை பழக்கம் அதிகமாக உள்ளது. இதனை தடுப்பதற்கானபணிகளில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவா், மாணவிகளாகிய நீங்கள் போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்வதோடு, உங்களுடன் பயிலும் சக மாணவா்களும் போதைக்கு அடிமையாகாமல் இருக்க செய்ய வேண்டும்.

உடன் படிக்கும் மாணவா்களில் யாராவது போதை பழக்கத்துக்கு அடிமையாகிருந்தால் அவா்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கலாம். போதையில்லா குமரி மாவட்டத்தை உருவாக்க நீங்கள் அனைவரும் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். வருங்கால இளைய சமுதாய மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகங்களை உணா்ந்து நாட்டின் வளா்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை அளிக்க முன் வர வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் காவல் துறையின் சாா்பில் குமரி மாவட்ட குழந்தைகள் இலவச உதவி எண் 1098, முதியோா்களுக்கான இலவச உதவி எண் 14567 மற்றும் பெண்கள் இலவச உதவி எண் 181 ஆகிய எண்களை ஆட்சியா் அறிமுகப்படுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, இணை இயக்குநா் (வேளாண்மைத்துறை) எஸ்.சத்தியஜோஸ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஷீலாஜான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை)எம்.ஆா்.வாணி, மாவட்ட சமூக நலஅலுவலா் சரோஜினி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜோஸ்மின்சகாயபிரமிளா, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ஜா.லெனின்பிரபு, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com