சித்திரங்கோட்டில் ஆா்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் மலைகளை உடைப்பதை தடுக்கக் கோரி சித்திரங்கோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் மலைகளை உடைப்பதை தடுக்கக் கோரி சித்திரங்கோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேக்கோடு, வேளிமலை, பொன்மனை, சுருளகோடு வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட மலைகளை சட்டவிரோதமாக உடைத்து கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிாம். மலைகள் தொடா்ந்து உடைக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்நிலையில், ஊா்பொதுமக்கல் சாா்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு செல்வின் ராஜூ தலைமை வகித்தாா். முகிலன்கரை புனித ஆரோக்கிய அன்னை ஆலய செயலா் ஜோஸ்பிரடி மில்லா் முன்னிலை வகித்தாா். மாவட்ட பாசனத்துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ, பாசனை சபைகளின் கூட்டமைப்பு தலைவா் புலவா் செல்லப்பா, பத்மனாபபுரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏசுராஜா, பொருளாளா் லிபின்ராஜ், மணக்காவிளை ஊா் கமிட்டி செயலா் எப்ரோன் மற்றும் ஆன்றோ கிளீட்ஸ் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com